Wednesday, February 9, 2011

Child Rights

குழந்தைகள் என்கிறபோது, அவர்கள் நமது குழந்தைகள் என்பதாலும், அவர்களை அவர்களாலேயே பாதுகாத்துக்கொள்ள இயலாது என்பதாலும் குழந்தைகளுக்கு என்று பாதுகாப்பு தேவை என்கிற விஷயத்தில் அனைவரும் ஒரே கருத்துடையவர்களாகத் தான் இருப்போம்.  இருப்பினும், குழந்தைகளாக இருப்பினும், அவர்களை பாதுகாத்திடுவதற்கான உரிமை அவர்களுக்கும் உண்டு என்பதை நாம் அறியவேண்டும். 

ஐ.நா சபை என்ன சொல்கிறது? 
ஐ.நா சபையின் குழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை,   குழந்தைகளுக்கு உரிமைகள் உண்டு என்றும், ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வதற்கான உரிமை, பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, வளர்ச்சியடையக்கூடிய மற்றும் பங்கேற்றலுக்கான உரிமை உண்டு என்றும் சொல்கிறது. மேலும், ஒரு குழந்தையின் உரிமை என்கிறபோது, அது அடிப்படையில் மனித உரிமை சார்ந்ததாக உள்ளது. 

இந்திய அரசாங்கம் ...
நமது  இந்திய அரசும் , குழந்தைகளுக்கான  உரிமைகளை  அங்கீகரிக்கும் ஐ.நா சபையின் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. குழந்தைகளுக்கு உரிமைகள் இருக்கின்றது என்கிறபோது பெரியவர்களான நமக்கு நமது குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். 

தொடரும்....